பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் R.W.R பிரேமசிறி தெரிவித்தார்.
இந்த குழு தற்சமயம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், பெருந்தெருக்கள் அபிவிருத்தியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்வதுடன்,விபத்தின் போது உடைந்து விழுந்த கற்பாறை இவ்வளவு காலமாக ஏன் அகற்றப்படவில்லை என்பது தொடர்பிலும் ஆராய்வதாக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.