29.4 C
Jaffna
Monday, April 19, 2021

வாழ்க்கை செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் திட்டம்

மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் நெல் கொள்வனவு அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து கருத்துரைப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

வரிகளை குறைப்பதன் ஊடாக அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டில் பயிரிடக்கூடிய 17 பயிர்கள் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இறக்குமதி தடைகள் விதிக்கப்பட்டன.

இதனூடாக குறித்த பயிர்கள் உள்நாட்டிலேயே பயிரிடப்பட்டுள்ளன.

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான கொடுப்பனவு 32 ரூபாயிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நெல்லுக்கான கொடுப்பனவின் நன்மைகள் ஒரு பகுதியிலுள்ள மக்களுக்கு மாத்திரமின்றி முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கும் கிடைத்துள்ளன.

மனித உரிமைகள் குறித்து பேசுபவர்கள் இதனூடாக மக்களுக்கு கிடைத்த நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில்லை.

மக்களின் பிரச்சினைகளை பார்த்து அரசாங்கம் அமைதியாக செயற்படாது.

அத்துடன் காடழிப்பு செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசியல் கைதிகளைச் சந்தித் முன்னணி எம்.பிக்கள்

முன்னணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல்கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைதிக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்! சிறீதரன்

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு...

தொல்லியல் திணைக்களம் தவிசாளர் நிரேசிற்கு எதிராக வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள...

அசேல சம்பத் பிணையில் விடுதலை!

உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை...

உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் மனுத்தாக்கல்!

2016ஆம் ஆண்டு  மார்ச் 29ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி...