28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்த அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறும் பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடந்த ஆண்டு ஏப்ரல் புத்தாண்டைக் கொண்டாட பொதுமக்களால் முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த ஆண்டு தொற்றுநோயின் பரவல் தொடர்ந்தாலும் பொதுமக்களுக்கு பண்டிகையைக் கொண்டாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே இலங்கையில் வைரஸ் பரவல் காணப்படுவதால் இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொருட் கொள்வனவில் ஈடுபடும்போதும் வெளியில் செல்லும்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை கண்டிப்பாக பின்பற்றவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் புத்தாண்டு பண்டிகை காலங்களில் இயங்கும் கடை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை கழுவுமாறும் அதேநேரம், வெப்பநிலையை கண்காணிப்பதுடன், சமூக தூரத்தை பராமரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட விரும்பினால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மக்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படலாம் என்றும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை..

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு...

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று(19.04.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை...