தொடருந்து இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முற்பகல் 14 அலுவலக தொடருந்துகள் கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொடருந்து சிலவற்றின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக பல பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது