பாகிஸ்தான் அரசின் தேவைக்கேற்ப இலங்கையில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
புர்கா தடை தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசின் தேவைகேற்ற விதத்திலேயே நாம் செயற்படுகின்றோம். புர்கா தடை விடயம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் காலத்தில் எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” – என்றார்.