28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு சிவில் குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ! – ஹாபீஸ் நசீர் அஹமட்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் போதைப் பொருள் வியாபாரத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் சிவில் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அதன் பழக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

நாட்டில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பிரதான மொத்த வியாபாரிகளை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது. இது வெளியில் தெரியாது. அதற்கு நாட்டின் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அத்தோடு சிறிய வியாபாரிகளை இல்லாமல் செய்ய வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசிய போது மட்டக்களப்புக்கு விசேட குழுவை வழங்குவதாக தெரிவித்தார்.

பிரதேசத்தில் காணப்படும் திணைக்களங்கள் தங்களது வேலைத் திட்டங்களை எமக்கு வழங்குங்கள். நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கீடுகளை கொண்டு வந்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம். ஐந்து வருடத்தில் அனைத்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் நிலையில் இங்கு போதிய வசதிகள் இல்லாமல் உள்ள நிலையில் கனரக வாகனம் (jcp), மின்பிறப்பாக்கி, தண்ணீர் வசதி என்பவற்றை வழங்கி உதவுமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் காணப்படும் திணைக்களங்கள் மற்றும் பொதுமக்கள் கழிவுகளை தரப்படுத்தி வைக்கும் வகையில் சபையினால் இலகுவாக கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக அமையும். எனவே இதனை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இதன் போது மீன்பிடிப் பிரச்சனை, யானைப் பிரச்சனை, டெங்கு பிரச்சனை உட்பட்ட பல பிரச்சனைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன், இவற்றுக்கான வேலைத் திட்டங்களை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாக சபையில் தெரிவிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.றுவைத், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, திணைக்கள அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை..

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு...

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று(19.04.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை...