28.9 C
Jaffna
Monday, April 19, 2021

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஏழு நாட்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளநிலையில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்குமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் ஏழாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இநநிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஏழாவது நாளாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Related Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் 9 பாடசாலைகள் உடைத்து திருட்டு ! – மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த...

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்...