28.9 C
Jaffna
Sunday, April 18, 2021

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது எனவும், இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச விரைவில் வெளியிடவுள்ளார் எனவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த முடியாது.

தற்போதைய தேர்தல் முறைமையில் பல குழப்பங்கள் உள்ளன. அதனால் புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை எதிர்காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்களை ஒருபுறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்தத் தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசுதான் இறுதி முடிவெடுக்கும்.

கடந்த நல்லாட்சி அரசு மாதிரி மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பது புதிய அரசின் நோக்கமல்ல. மக்களின் ஜனநாயக உரிமைக்குப் பாதகம் இல்லாமல் புதிய தேர்தல் முறைமையில் எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை. தேர்தல் விரைவில் நடக்கும் என்று பொய்யான வாக்குறுதியை வழங்கி மக்களை ஏமாற்ற அரசு விரும்பவில்லை” – என்றார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் நடத்தப்படும் என்ற செய்தி வெறும் ஊடகச் செய்தியே. அது அரசின் செய்தி அல்ல. மாகாண சபைத் தேர்தலை ஜுனில் நடத்துவது தொடர்பில் அரசு தீர்மானம் எதையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Related Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

Stay Connected

6,849FansLike
620FollowersFollow
1,026SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி...

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து...

யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கு கெரோனா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை...

கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் 9 பாடசாலைகள் உடைத்து திருட்டு ! – மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த...

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்...