காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் நேற்று சுகவீனம் காரணமாக உயிர் இழந்துள்ளார். வவுனியா, மறவன்குளத்தை சேர்ந்த த.பேரின்பநாயகி என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது மகன் 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டார். அன்று முதல் தனது மகனை தேடி வந்தார் பேரின்பநாயகி.
வவுனியாவில் 1465 நாட்கள் நடந்து வரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் இவர் கலந்துகொண்டிருந்தார். தனது மகனை தேடி வந்த இவர் நேற்று சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சு.கனகமணி என்ற தாயும் உயிரிழந்திருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த நிலையில், சுகவீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.