February 25, 2021, 7:13 am

வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் பெயர்

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மருக்காரம்பளை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் அவர்களின் எண்ணக்கருவில் கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு புதிதாக தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயர்களை வைக்கும் திட்டம் தொடர்பில் பொதுமக்கள் , பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு கணேசபுரம் முதலாம் ஒழுங்கை தொடக்கம் 12ம் ஒழுங்கை வரை அழைக்கப்பட்ட வீதிகள் அவற்றின் ஒழுங்கைகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் என பல்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து இப்பெயர்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அனுமதியுடனும் பிரதேச செயலக ஒத்துழைப்புடனும் சட்டரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வீதிகளுக்கு இப்பெயர் பலகைகளை நிர்மாணிக்கவும் மக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கணேசபுரம் முதலாம் ஒழுங்கை ( இடது):- இளங்கோ வீதி , முதலாம் ஒழுங்கை ( வலது) :-சுப்பிரமணியம் வீதி , 2ம் ஒழுங்கை:- புனித சின்னப்பர் வீதி , 2ம் ஒழுங்கை 1ம் குறுக்கு தெரு :- நாச்சியார் வீதி , 2ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு :- கபிலர் வீதி , 3ம் ஒழுங்கை:- அகத்தியர் வீதி , 4ம் ஒழுங்கை :-விவேகானந்தர் வீதி , 4ம் ஒழுங்கையின் 1ம் குருக்கு தெரு :- மாருதி வீதி , 4ம் ஒழுங்கையின் 2ம் குருக்கு தெரு :- கரிகாலன் வீதி , 5ம் ஒழுங்கை :- கம்பர் வீதி , 6ம் ஒழுங்கை : கருமாரி அம்மன் கோவில் வீதி , 7ம் ஒழுங்கை :- தனிநாயகம் வீதி , 8ம் ஒழுங்கை :- எல்லாளன் வீதி , 8ம் ஒழுங்கையின் 1ம் குருக்கு தெரு :- அருணாசலம் வீதி , 9ம் ஒழுங்கை :- பாண்டியன் வீதி , 10 ம் ஒழுங்கை :- சேக்கிழார் வீதி , 11ம் ஒழுங்கை :- பாரதி வீதி , புதிய வீட்டுத்திட்ட ஒழுங்கை:- விபுலானந்தர் வீதி , 40 வீட்டுத்திட்ட வீதி :- சேரன் சுற்றுவட்ட வீதி , சேவலங்கா வீதி :- காந்தி வீதி எனவும் மாற்றம் பெற்றுள்ளது.

கிராம சேவையாளரின் இவ் நடவடிக்கை தமிழர் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளதுடன் கிராம சேவையாளருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Related Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

இன்றைய ராசி பலன்கள் 25/02/2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...