யாழ்ப்பாணத்தில் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் நேற்று (22) மாலை மடக்கிப்பிடிக்கப்பட்டது.
மாலை வேளைகளில் தனியே பயணிப்பவர்களை வழிமறிக்கும் குறித்த நால்வர் கொண்ட கும்பல் தமது வாகனத்திற்கு பெற்றோல் இல்லை என்று தெரிவித்து பணம் தருமாறு மிரட்டல் பாணியில் பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்திருக்கின்றது.
இந்தச் சம்பவம் தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில், நாவற்குழி இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று குறித்த நபர்களை சுற்றி வளைத்திருக்கின்றனர்.
சுற்றிவளைக்கப்பட்ட நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பலாலி வீதி உட்பட்ட பல முக்கிய வீதிகளிலும் இதே வகையிலான பணம் பறிக்கும் நடவடிக்கை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.