இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றசாட்டினை பொலிஸ் தலைமையகம் நிராகரித்துள்ளது. இது குறித்து தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில, பெண் பொலிஸ் அதிகாரிகளின் உரிமை மீறப்படும் வகையில் செயற்படுவதாகவும், சில அதிகாரிகள் தனிப்படட பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களில் அங்கீகரிக்கப்படட பதவிகளில் நூற்றுக்கு 15 சதவீதமான பதவிகள் பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு அமைய இலங்கை பொலிஸ் பதவிகளில் 15 சதவீதமான இடங்கள் பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.