March 9, 2021, 9:27 am

ஐ. நா. மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (22) ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன 23 ஆம் திகதி மாலைவேளை அல்லது 24ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து இணைய வழியூடாக உரையாற்றவுள்ளார்.

தினேஷ் குணவர்த்தன உரையாற்றும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும் அது தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி 12 மணிவரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன.

22ஆம் திகதி நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளார். இதன் போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின் போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இம்முறை 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளன.

குறித்த அறிக்கையும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்ததுடன் அந்த அறிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!

நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...

அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!

நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...

அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...

மன்னார் மீன் சந்தை தற்காலிகமாக பூட்டு !

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) பல்வேறு...

ரஞ்சனுடன் புகைப்படம் எடுக்க ஹர்ஷன எம்.பிக்கு அனுமதியளித்த சிறை அதிகாரி பணி இடைநிறுத்தம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன  ராஜகருணாகவை அனுமதித்த சிறைச்சாலை காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையைச் சேர்ந்த சிறைச்சாலை காவலர் ஒருவரே இவ்வாறு...