March 1, 2021, 10:46 am

மனித உரிமைகள் சபை உள்ளக நாட்டுத் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!!

எதிர்வரும் மனித உரிமைகள் சபை அமர்வில் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் புதிதாக கொண்டுவர இருக்கும் நகல் தீர்மான வரைபு வெளிவந்துள்ள நிலையில் இதுதொடர்பில் கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள தமிழ்மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படி நிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது எனவும் கடும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரைபு தயாரிப்பதற்குப் பொறுப்பாகவிருந்த பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டி நீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேள்வி: ஜெனீவா தூதுக்குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட ‘சீரோ’ வரைவை பார்த்தீர்களா? அதுபற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

பதில்: ஆம். பிரதி ஒன்று மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப்பட்டது. குறித்த வரைவானது குறைபாடு உள்ளதாகவும், ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர் ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது. 

குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது. அத் தீர்மானமோ அதனுடைய குறைபாடுகளால் தான் தோல்வியடைந்தது. தமிழ் மக்களுக்குத் தேவையானதும், சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும் போது இவ்வாறான ஒரு வரைவு இலங்கை அரசாங்கத்திற்கு முரணான ஒரு கருத்தைக் கொண்டு செல்வதாக அமைகின்றது. தாமதம் அடையும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஏற்கனவே ஆறு வருடங்கள் சென்று விட்டன. இலங்கை அரசாங்கம் தான் செய்வதாகக் கூறியவற்றில் எதனையும் மனமுவந்து செய்யவில்லை.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும், கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைவைத் தயாரித்தமை மன வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இது கண்டு விருந்துகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுவார்கள். 

இவ்வாறான வரைவானது போர்க் குற்றங்களையும், மனிதத்திற்கெதிரான குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் எந்தவிதப் பயமும் இன்றி இயற்றலாம் என்ற ஒரு கருத்தை உலகளாவிய அரசாங்கங்களுக்குக் கொடுப்பதாக அமையும். 

மனித உரிமைகள் சம்பந்தமாகவும், அடிப்படை நன்நடத்தை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தும் யாவருக்கும் இவ்வாறான ஒரு வரைபு மன வேதனையை அளிக்கும். 

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் இலங்கையின் வட- கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற P2P பேரணிகள் தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காணுகின்றோம். 

புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ்மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும், நல உரித்துக்களையும், அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும். 

தமிழ்த் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ நான் அறியேன்.

இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.

Related Articles

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் தொடங்கியது.சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி வரையான பகுதிவரை நகர்கிறது.போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

நெடுந்தூர பேருந்து ஓட்டுநர்களும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் முறுகல்!!

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.புதிதாக...

யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.இலங்கை...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சிறீதரன் எம்.பி யிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில்...

“தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய்? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய்” தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார் ICBT Campus நிறைவேற்று...

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய் , இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்,...