February 27, 2021, 12:18 pm

நகரசபையின் அறிவுறுத்தல்களை மீறி குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்

வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணியை தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிவருகின்றனர். 

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

உக்கிளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அனுமதியின்றியும் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் தனியார் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது . சுமார் நூறு அடி உயரமாக அமைக்கப்படவுள்ள இக்கோபுரத்தைச் சூழவுள்ள பகுதியில் வசித்து வரும் 30 தொடக்கம் 35 வரையான குடும்பங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது . 

இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் , நகரசபை , பிரதேச செயலாளர் , சுற்றுச்சூழல் பாதுகாப்புச் நகரசபை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டும் இதன் நிர்மாணப்பணிகளைத் தடுப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை . இன்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

இப்பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட அரச ஊழியர்கள் எனப்பலதரப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் . மக்கள் குடியிருப்புப்பகுதியில் இவ்வாறு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தினால் பல்வேறு அபாயமான அச்சுறுத்தல்கள் எமக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி மக்கள் குடியிருப்பு அற்ற பகுதிகளில் இக்கோபுரத்தின் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

குறித்த கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் நகரசபையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், இதன் பணிகளை மேற்கொள்வதற்கு தடை அறிவறுத்தல் நகரசபையினால் வழங்கப்பட்டுள்ளது. பணிமேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...

தா. பாண்டியன் வாழ்க்கை வரலாறு…

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில்...