March 7, 2021, 6:03 pm

சீனாவை எண்ணி பதற வேணாம் இந்தியா – வீரசேகர

இலங்கையில் சீனா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிரவும் இராணுவக்குவிப்பினைச் செய்யவில்லை. ஆகவே இந்தியா தேசியாபதுகாப்பை முன்னிலைப்படுத்தி அச்சமடைய வேண்டியதில்லை என்று கோட்டபாய அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவ்விடயம் தொடர்பில் எழுப்பபட்ட வினாக்களும் பதில்களும் வருமாறு,

கேள்வி:- அரசியல் ரீதியில் சீனாவின் தலையீடுகள் உள்ள காரணத்தில் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

பதில்:- அவ்வாறு எந்த நாட்டினதும் நேரடி அரசியல் தலையீடுகள் எமக்கில்லை, சீனாவுடன் நாம் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதறாக இந்தியாவுடன் நட்புறவை நாம் முறித்துக்கொள்ளவில்லை, அவர்களுடனும் வர்த்தக, கலாசார ரீதியிலான உறவு கையாளப்படுகின்றது. ஆனால் இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல இலங்கை – இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள வேண்டும்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நாட்டிற்கு உகந்த, இலங்கையால் சமாளிக்கக்கூடிய வேலைத்திட்டங்களே முன்னெடுக்க முடியும்.

கேள்வி:- வடக்கில் மின் சக்தி அபிவிருத்தி திட்டத்தை சீனாவுக்கு கொடுத்தமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையாகும் என்று கூறப்படுகின்றதே?

பதில்:- வெறுமனே தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை கைவிட முடியாது. நாட்டிற்கு அபிவிருத்தி அவசியமானது. பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுத்தாக வேண்டும். இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டுமே சீனா முன்னெடுக்கின்றது, மாறாக அவர்களின் இராணுவம் இங்கு குவிக்கப்படவில்லை. இலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பு எப்போதுமே இலங்கை வசமே இருக்கும். ஹம்பாந்தோட்டையாக இருந்தாலும் யாழ்ப்பாணமாக இருந்தாலும் கடல் எல்லையை இலங்கை கடற்படையே பாதுகாக்கும். இதில் இந்தியா அச்சமடைய வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை. சீனாவினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் எதுவும் இல்லை என்றார்.

Related Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

அரசின் கைக்கூலியாம் முன்னணி – மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது...