March 9, 2021, 4:30 am

பாக். பிரதமர் உரை இன்மை ஆபத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாராளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டமை இராஜதந்திர ரீதியில் நாட்டிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இராஜதந்திர தவறுகளை இழைப்பதில் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறது என்றும் சாடியிருக்கிறார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கைப் பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றவிருந்த நிலையில், அது இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். இலங்கையின் நீண்டகால நட்பு நாடாக பாகிஸ்தான் இருந்துவருகிறது. மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேசத் தொடர்புகள் என்பவை இராஜதந்திர ரீதியில் மிகவும் மதிப்பு வாய்ந்த சொத்துக்களாகும். அவற்றை ஆட்சியாளர்கள் சீர்குலைக்கக்கூடாது. எனினும் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் இராஜதந்திர தவறுகளை இழைப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கின்றது.

Related Articles

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியானது!

கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை...

கொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன

கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியானது!

கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை...

கொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன

கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...

கொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்

கொவிட்19 நோயால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த...

உன்னுடைய காதல் உண்மை என நிரூபிக்க இதை செய்! இளைஞன் பேச்சை கேட்டு மைனர் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்.. நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.இந்த...