February 27, 2021, 12:08 pm

யாழ் மாநகர முதல்வர் தெரிவித்த கருத்து அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்ற குற்றம்சாட்டு

யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையம் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் தெரிவித்த கருத்து அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்ற குற்றம்சாட்டு என முன்னாள் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே திறப்பதில் காலதாமதம் காணப்பட்டதாக முதல்வர் வி.மணிவண்ணன் அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்று குற்றம்சாட்டியுள்ளார் என முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினை கையேற்பதற்காக நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டோம்.

கலாசார நிலையத்தினை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான அனுமதிக்காக பிரதமரை நேரில் சந்தித்து உரையாடவும் நிர்வாக ரீதியில் அனுமதி கோரியிருந்தோம். அதற்கான அனுமதி கிடைத்து உரையாடவுள்ள விடயங்கள் தொடர்பில் பட்டியல் கோரப்பட்டபோது இந்த விடயமே முதன்மைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டது.

நான் மாநகர முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் இதனை திறக்க முயன்றும் கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட காலத்தில் சிலர் இதனை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முயல்வதாக அறிந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா ஊடாக இந்தியத் தூதுவரை கொழும்பில் சந்தித்து இதனை உடன் திறக்கவும் இந்தியப் பிரதமர் மோடி அவர்களே திறந்து வைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தோம்.

இந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியா சென்ற அமைச்சர் குழாமில் இருந்த ஓர் அமைச்சரே இதனை மாநகர சபை நிர்வகிக்க மாட்டாது என்பதனால் எம்மிடம் கையளியுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை இந்நாள் முதல்வரின் பங்காளிக் கட்சியின் தலைவர் மூலம் உறுதி செய்ய முடியும். ஏனெனில் அவரும் அந்த அமைச்சர் குழாமில் அங்கம் வகித்திருந்தார்.

இந்த விடயங்களை கூட்டமைப்பு சார் மாநகர சபை உறுப்பினர் அப்போதே மாநகர சபையில் பிரஸ்தாபித்த போதும் கலாசார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்க முடியாது என சபையிலேயே தெரிவித்திருந்தேன். இந்தக் காலத்தில் சபையில் இருந்திருக்காத இந்நாள் முதல்வர் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச் சாட்டை முன்வைக்க கூடாது. இக் கட்டிடம் கட்டும் காலத்தில் இந்தியா என்றாலே றோ எனக் கூறி ஓடி ஓழித்து அவர்களிடம் பெறும் உதவியினையே மறுத்தவர்கள் இவர்கள்.

இது மட்டுமல்ல மாநகர சபையின் புதிய கட்டிடத்திற்கு முதலில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்டபோதே 300 மில்லியன் ரூபா சபை நிதியில் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் பின்னர் 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபா செலவாக அதிகரித்த போதும் சபையின் எந்த நிதியும் இன்றி அமைப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தோம்.

இதன் ஆரம்ப நிகழ்வின் செலவிற்கு வெறும் 10 மில்லியன் ரூபா அனுமதி போரியபோது இந்த கட்டிடம் அமைக்கப்படமாட்டாது அதனால் இந்த அனுமதியை வழங்க முடியாது எனக் கூறியவர்கள் இன்றைய ஆட்சியில் உள்ள இரு பங்காளிக் கட்சிகள்தான்.

ஆனால் இந்தக் கட்டிடம் வராது விட்டால் எனது சொந்தப் பணத்தில் வழங்கத் தயார் என எமது கட்சி உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் ஓர் உறுப்பினரும் கூறியதன் பெயரிலேயே அது அன்று அனுமதிக்கப்பட்டது.

இவை எதுவுமே அறியாது முதல்வராக வந்தபின்பு ஓடிப்போய் அக் கட்டிடத்தை பார்த்து வழி நடாத்துகின்றனராம். இது தான் அநாகரீக அரசியல் என்றார்.

Related Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தா.பாண்டியன் ஐயாவின் குரல் மௌனித்தது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு: சிறீதரன் எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது மறைவு...

பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்ற தீவிரவாதிகள் !

நைஜீரியா பெண்கள் தங்கிப் படிக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள் அங்கிருந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற...

இந்திய அணியிலிருந்து விலகினாரா பும்ரா ?

இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்படட காரணங்களால் நான்காவது டெஸ்ட் இற்கு முன்னாள் தன்னை விடுவிக்குமாறு பும்ரா பி.சி.சி.ஐ இற்கு...

கமலுடன் அரசியலில் இணைந்த பிரபல நடிகர் !

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தேர்தல் தேதியும் நேற்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மாற்றம் வேண்டும்...

தா. பாண்டியன் வாழ்க்கை வரலாறு…

மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியில்...