March 4, 2021, 8:47 am

கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு ஆனோல்ட் இணங்கியதாக தெரிவிப்பு…

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடக சந்திப்பில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் மாநகர முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருகிறேன். எனினும், குறித்த கட்டடமானது யாழ்ப்பாண மாநகர சபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில் அதனை, யாழ். மாநகரசபை பொறுப்பேற்று நடத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

மேலும், அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துள்ளேன்.

அந்தக் கட்டிடத்தினை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் கட்டடத்தை எவ்வாறு கையாள்வது, பராமரிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுதுள்ளோம். வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்புவிழா செய்யப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதோடு, இந்தியத் துணைத்தூதுவரிடம் இதுகுறித்து பல விடயங்களைத் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் இதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்.

இதேவேளை, முன்னைய மாநகர ஆட்சியாளர் குறித்த கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசாங்கத்திற்குக் கையளிப்பதற்கு இணங்கி இருந்ததன் காரணமாகவே இவ்வளவு காலமும் குறித்த கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

எனினும், இந்த கலாசார மத்திய நிலையமானது யாழ். மாநகர சபையின் சொத்தாகும். அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது மாநகர சபைக்கு மீண்டும் கையளிக்கப்படவுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

உடற்தகுதி சோதனையில் தேர்ச்சிபெற தவறிய வருண் சக்ரவர்த்தி!

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இந்திய தேசிய அணிக்கு தெரிவாவதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற தவறியுள்ளார்.இந்நிலையில், பெங்களுருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் மறுசீரமைப்பு பயிற்சிகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளார்.துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறன்களை சிறப்பாக...

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

உடற்தகுதி சோதனையில் தேர்ச்சிபெற தவறிய வருண் சக்ரவர்த்தி!

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இந்திய தேசிய அணிக்கு தெரிவாவதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற தவறியுள்ளார்.இந்நிலையில், பெங்களுருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் மறுசீரமைப்பு பயிற்சிகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளார்.துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறன்களை சிறப்பாக...

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாத பலர் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு நகரிற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பலர் பொலிஸாரினால் புதன்கிழமை மாலை (03) கண்டுபிடிக்கப்பட்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையில் தொற்றுநோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதார...

யாழில் நூதனமாக கொள்ளையிடும் குழு !

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த கொள்ளைக் கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.“யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கைதீவு,...