அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விவசாய அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா , அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த காலங்களில் அமைச்சிற்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் காரணமாகவே அவர் தற்போது பதவி விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.