March 2, 2021, 5:42 pm

கோட்டா நியமித்த குழுவுக்கு எதிராக பேராயார் ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு குறித்த துறைசார் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவை தம்மால் ஏற்க முடியாது என  பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவாட்டிய தேவாலயத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஸ தலைமையிலான குறித்த குழுவை ஜனாதிபதி நேற்றைய தினம் நியமித்திருந்தார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அந்த குழுவிற்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த முதலாம் திகதி கோட்டபாயவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அந்த அறிக்கையின் பிரதிகளை தமக்கு வழங்குமாறு பேராயரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புதிய குழு கோட்டபாயவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கட்டுவாட்டிய பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ; திலீபன் தலைமையில்

2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...

யாழ் மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதரக ஓர் அதிகாரி

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் (...