February 27, 2021, 9:21 pm

யாழை மீண்டும் முடக்காமல் இருப்பது மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது: அரசாங்க அதிபர்

யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது. அதேசமயம் 190 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

இந்நிலைமையில் யாழ் மாவட்டத்தில் 258 குடும்பங்களைச் சேர்ந்த 610 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரப் பகுதியினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது. தொடர்ந்து ஏனைய பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்குரிய பூர்வாங்க வேலைத் திட்டங்கள் அனைத்தும் சுகாதார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைத்தவுடன் மிக விரைவாக பொதுமக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் மாவட்ட செயலகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள். தற்பொழுது மாவட்டத்தில் இயல்பு  நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி உள்ளன. இருந்தபோதிலும் சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

ஏனென்றால் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற இயல்புநிலை மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார். அந்த வகையிலே தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியான எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளும் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. 

குறிப்பாக வியாபாரிகள், சந்தைகள் மக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார். 

மேலும் கடந்தகால அவதானிப்புகளின் படி வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஊடாக  தொற்று இங்கே பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்களையும் பாதுகாத்து தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தாங்களாக முன்வந்து தங்களுடைய தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல் சிறந்தது.

மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையை மனதில் இருத்தி பொதுமக்கள் தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தல் மிகவும் அவசியமானதாகும் என்றார்.

அத்தோடு, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் எமது மாவட்டத்தில் மேலும் கொரோனா கொத்தணி உருவாகாது தடுக்க முடியும். அத்தோடு பொதுமக்கள் மீண்டும் ஒரு முடக்கல் நிலைக்கு எமது மாவட்டத்தை இட்டு செல்லாது பாதுகாத்தல் அவசியம் எனவும் தெரிவித்தார்.

Related Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...

தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...

யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்

யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...