March 7, 2021, 8:04 am

PCR இயந்திரம் கையளிப்பதற்கு யாழ் வரும் அமெரிக்கத் தூதுவர்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள PCR பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட PCR இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர், பேராசிரியர் S. ரவிராஜிடம் PCR இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கவுள்ளார்.

நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் A. கேதிஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் S. ஶ்ரீபவானந்தராஜா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலத்தில் வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான வசதிகள் இல்லாத நிலையில், இங்கிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை அனுராதபுரம் மற்றும் தென்னிலங்கையில் அமைந்திருக்கும் PCR பரிசோதனை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி முடிவுகளைப் பெற வேண்டி இருந்தது.

இதனால் முடிவுகளைப் பெறுவதில் பெரும் அசௌகரியங்கள் காணப்பட்டதுடன், தாமதமும் ஏற்பட்டது.இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் தன்னிடமிருந்த ஒரேயொரு PCR இயந்திரத்தைக் கொண்டு, கடந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இதனால் வடக்கில் பெறப்பட்ட மாதிரிகளை இங்கேயே பரிசோதித்து, முடிவுகளை விரைவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் பின்னரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் PCR பரிசோதனை ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தற்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள இரண்டு PCR இயந்திரங்களைக் கொண்டு நாளொன்றுக்கு சராசரியாக 300 மாதிரிகளைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

Stay Connected

6,575FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...

இந்த ஆப் எல்லாம் உங்க போன்ல இருக்கா ? – எச்சரித்த கூகிள்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும். இதோ...