இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களம் இன்றைய தினம் இது குறித்து நீதிமன்றில் அறிவித்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அர்ஜூன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவின் பிரகாரம் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் அடங்கிய விசேட உயர் நீதிமன்றினால் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.