March 9, 2021, 10:40 am

நாடாளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்ட தகவல்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்கு விதி குறித்த விவாதம் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1 மணிவரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 10 மணிமுதல் 11.30 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய் மூல விடைக்கான வினாவுக்கு மாத்திரம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்கு பண்டாரவின் மறைவு தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய் மூல விடைக்கான வினா நேரம் ஒதுக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!

நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...

அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...