மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வெப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தின் இருபத்து நான்காவது வருட பூர்த்தியை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் என்று வழங்கி வைக்கப்பட்ட்து .
பாடசாலை அதிபர் எஸ். சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி த.அகிலா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.ஜெயக்குமார், கழகத்தின் நிதிப் பொறுப்பாளர் எஸ்.தமிழினி, கழகத்தின் பிரதான ஊடக இணைப்பாளரும், கல்குடாத் தொகுதி பணிப்பாளருமாகிய ஊடகவியலாளர் ந. குகதர்சன், கழகப்பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு ரூபா. ஆயிரத்து ஐந்நூறு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படடதோடு, கழகத்தின் இருபத்து நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்களோடு கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்ட்து

