March 9, 2021, 4:51 am

சிங்கள இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல் தொடரும் : கருணா கட்சியின் செயலாளர்

எந்த அரசாக இருந்தாலும் சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்சி நிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை செயற்படுத்துபவர்களாகவே இருப்பார்கள் என கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் செயலாளர வ. கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வடமாகாண கிளையின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் வாழ்க்கைதரம், பொருளாதாரம், போன்றவை தொடர்பாக அக்கறைகொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

கடந்த தேர்தலில் மொட்டுச்சின்னத்திற்கு 42 ஆயிரம் வாக்குகளை திரட்டிக்கொடுத்த உறுப்பினர்கள் இங்கே உள்ளார்கள். மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி பலவிடயங்களை செய்யமுடியாத இயலாத்தன்மை இந்த அரசிலே காணப்படுகின்றது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் மொட்டுச்சின்னத்தின் பிரதிநிதிகளாக பலர் தெரிவு செய்யபட்டிருந்தாலும். எங்கள் கட்சி உறுப்பினர்களை கவனம் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது. இவை தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

இந்த அரசு தமிழர்களிற்கு எதிரான போக்கினை மாத்திரமின்றி இலங்கை பிரஜைகளுக்கு எதிரான போக்குகளையும் முன்னெடுக்கிறதோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.

தமிழ் மக்களின் காணிகளிற்குள் அல்லது அவர்களின் வளங்களிற்குள்ளே தொல்பொருள் ஆக்கிரமிப்பு, மற்றும் புத்தர் சிலைகளை நிறுவும் செயற்பாடுகள் நல்லாட்சி அரசின் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது. இந்த அரசிலும் அது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அதனை நாம் கவலையுடன் பார்க்கிறோம்.

இது எந்த அரசு என்பதைவிட சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்சி நிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையாகவே காணப்படுகின்றது என்பது தான் என்னுடைய கருத்து.

கடந்த தேர்தலில் எமது கட்சி கோட்டபாயவின் வெற்றிக்காக உழைத்தி்ருந்தது. அந்த நேரத்தில் நாம் வழங்கிய உழைப்பிற்கான பிரதிபலன் எமக்கு கிடைக்கவில்லை. கோட்டபாய தன்னுடைய அரசியல் கடமையில் இருந்து தவறுகிறாரா என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. ஆனால் நாம் எமது முயற்சிகளை கைவிடவில்லை.

முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றமையால் பிரதமர் மகிந்த எமது கட்சித்தலைவர் கருணாவிற்கு ஒரு பதவியை வழங்கியுள்ளார். அந்த பதவிக்குள் கட்டுப்பட்டவராக அவர் அரசியலை முன்னெடுக்க முடியாது அரசின் கொள்கை திட்டங்களை முன்னெடுப்பவராக அங்கே கடமையாற்றி கொண்டிருக்கிறார்.

ஆனால் எமது கட்சி பிரதமருடன் எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை. தமிழர்களுடைய தீர்வுத்திட்டத்திற்கான ஒற்றுமையை உருவாக்குவதென்ற அடிப்படையில் எமது கட்சியின் கொள்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Articles

கோர விபத்தில் தம்பியின் கண் முன் உயிரிழந்த அண்ணன்

புத்தல பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.புத்தல பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த...

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியானது!

கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கோர விபத்தில் தம்பியின் கண் முன் உயிரிழந்த அண்ணன்

புத்தல பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.புத்தல பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த...

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியானது!

கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை...

கொரோனா பரவலிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன

கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் இலங்கையை தாக்கியிருந்த காலப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.இந்த துறைமுகத்தின் ஊடான சரக்கு கையாளும் பணிகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்...

கொவிட் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்

கொவிட்19 நோயால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த...