யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
மாவட்ட செயலகத்தில் வைத்து அவரை மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபாசுதன் ஆகியோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து நட்பு ரீதியான கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பின்போது இந்திய அரசால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.