March 4, 2021, 9:43 am

பளையில் பல ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை! – அம்பலப்படுத்தினார் சுரேஷ்

கிளிநொச்சி மாவட்டம், பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் காணியுள்ளது. அந்தப் பகுதியில் சீன நிறுவனத்துக்கும், சிங்கள முதலாளிகளுக்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்குக் கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்து சீனக்காரருக்குக் கொடுக்க, சிங்களவர்களுக்குக் கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

பளையில், புதுக்காட்டுச் சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன. அதை சிங்கள முதலாளிகளுக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களுக்கு வழங்காமல் சிங்கள முதலாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அரசியல் பிரச்சினையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசு கூறிக்கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சீனக்காரருக்கும், சிங்களவர்களுக்கும் கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசு மேற்கொள்கின்றது.

அரசு, இராணுவம் அனைவரும் கூட்டாக இதனைச் செய்கின்றார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்துக்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான்.

இந்த மாற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். வடக்குக்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்துக்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களுக்குக் காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்குக் காணி வழங்காமல் சீனக்காரருக்கும், சிங்களவர்களுக்கும் வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களுக்குத் தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலுக்கு அரசு தள்ளுகின்றது” – என்றார்.

Related Articles

Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி

ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவை கருதி பயன்படுத்த, தேசிய ஔதடங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் இதற்கான அனுமதியை கோரியிருந்தது.3 இலட்சம் Sputnik V தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க...

பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி – குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே...

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.அண்மையில் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி

ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவை கருதி பயன்படுத்த, தேசிய ஔதடங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் இதற்கான அனுமதியை கோரியிருந்தது.3 இலட்சம் Sputnik V தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க...

பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி – குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே...

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.அண்மையில் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த...

மியன்மாரில் பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அதனை ஒடுக்குவதற்காக...

இளைஞர் நாடாளுமன்றத்தில் முதலாவது உரை…

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்பு அமைச்சர் MHM. அஸீம் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட முதலாவது உரைகௌரவ சபாநாயகர் அவர்களே,இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இளம் தலைமுறையின்...