February 25, 2021, 7:50 am

பளையில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனத்திற்கும் சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்க நடவடிக்கை!

கிளிநொச்சி – பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது.

அந்த பகுதியில் சீன நிறுவனத்திற்கும், சிங்கள முதலாளிகளிற்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து சீனாவிற்கு கொடுக்க, சிங்களவர்களிற்கு கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

பளையில் புதுக்காட்டு சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திசபைக்கு சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன. அந்த காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும் அவர்களிற்கு வழங்காமல் அதை சிங்கள முதலாளிகளிற்கு கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரச்சனையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தியென்ற பெயரில் தமிழர்களின் காணிகளை பிடுங்கி சிங்களவர்களிற்கு கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது.

அரசாங்கம், இராணுவம் அனைவரும் கூட்டாக இதனை செய்கிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான். இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கிற்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களிற்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களிற்கு காணி வழங்காமல் சீனா, சிங்களவர்களிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களிற்கு தமிழ்மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலுக்கு அரசு தள்ளுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

இன்றைய ராசி பலன்கள் 25/02/2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...