March 9, 2021, 9:58 am

இலங்கையில் பாஜக கட்சியை துவக்குவதற்கு ரகசியமாக முன்னெடுக்கப்படும் முயற்சிகள்?

இலங்கையிலும் பாஜக கட்சியை துவக்குவதற்கான முயற்சிகள் ரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினரும் காந்தளம் பதிப்பகத்தின் உரிமையாளருமான மறவன் புலவு சச்சிதானந்தம் தான், இலங்கையில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைக்கும் முகமாக இந்த முயற்சியை எடுத்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவருக்கு நெருக்கமான தமிழ்த்தேசியத் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’இலங்கை அரசின் கண்காணிப்பில் அவர் இருப்பதால் அவரது எண் எப்போதும் அனைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

ஆனால், அவர் தனது அரசியல் செயல்பாடுகளை தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள பாஜக கட்சியை இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான தேவை இருப்பதாகவும் சொல்லிவருகிறார் சச்சிதானந்தம்.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் அரசியல் கட்சிகள் உருவாகியிருக்கின்றன.

அந்த வகையில், சைவ சித்தாந்தங்களில் புலமைப் பெற்றவரான சச்சிதானந்தம், இலங்கையில் சிங்கள அரசாங்கத்தால் அழிக்கப்பட்டு வரும் சைவ திருக்கோயில்களை பாதுகாக்காக்கவும் அதனை மீட்டெடுக்கவுமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து, இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்துக்குப் பல தகவல்களைக் கொண்டு சேர்த்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதே போல, தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் மூலம் பாஜக தலைவர்கள் சிலருடனும் விவாதித்துள்ளார் சச்சிதானந்தம்.

குறிப்பாக, இலங்கையில் பாஜக கட்சியைத் துவக்குவது குறித்து விவாதித்துள்ளனர். பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் காயத்ரி ரகுராம்.

இலங்கையில் பாஜகவை உருவாக்கும் சச்சிதானந்தத்தின் முயற்சிக்குப் பின்புலமாக இருந்து உதவிவரும் காயத்ரி ரகுராமிடம் நாம் பேசியபோது, இந்துக்களின் அடையாளத்தையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் அழிக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.

அவைகள் தடுக்கப்பட வேண்டும். இந்துக்களின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாக்கவும், அதனை மீட்டெடுக்கவுமான அரசியல் கட்சிகள் அங்கு வலிமையாக இல்லை.

இப்போதும் இரண்டாம்தர மக்களாகத்தான் தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பது அரிதாகியிருக்கிறது.

அதனால், இந்தியாவில் இருக்கும் பாஜக போன்று, ’இலங்கை பாஜக’என்ற ஒரு அரசியல் கட்சி இலங்கையில் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் பாஜக உருவாவதற்கு நாங்கள் துணை நிற்போம் என்கிறார்.

Related Articles

திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு …

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன.ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக...

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் !

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை...

யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!

நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...

அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...