March 5, 2021, 1:53 pm

அலி சப்ரியின் காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர் என்பதால், அந்தத் தாக்குதலைப் போன்ற தாக்குதல்கள் நாளையும் நடக்கலாம் எனத் தெரிவித்த பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் -, அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

‘தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்.

ராஜபக்ஸர்களின் வழக்குகளை விசாரித்ததற்காக, இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டுமா, அதை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்’ என்றார்.

பொதுபல சேனா தலைமையகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கும் என மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எம்மைப் குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம் எனக் கேட்டார். அத்துடன், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. அதனால், எதையும் எளிதாக விட்டுவிடமாட்டோம் என்றார்.

வரவிருக்கும் பேரழிவிலிருந்து முழுநாட்டையும் பாதுகாக்க பொதுபலசேனா பல திட்டங்களைச் செயற்படுத்தியதாகத் தெரிவித்த அவர், ஆனால், இப்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது. எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

எந்ததெந்த ஒழுங்குப்பத்திரங்களை மனதில் வைத்துக்கொண்டு, தமது எதிர்கால அரசியல் தேவைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் திருடர்கள், ஆணைக்குழுவுக்குள் நுழைந்துவிட்டனரா என்று எமக்கு தெரியவில்லை.

பொது பலசேனாவைத் தடைசெய்யவோ, எம்மீது குற்றம் சுமத்தவோ வருவார்களானால், அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

தேசத்தின் தலைவிதியைக் காப்பாற்ற, சிறைக்குச் சென்றவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுவென்றால், இந்த அறிவியலற்ற முறை குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஜனாதிபதிக்கு மாத்திரமே, இப்போது கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் உள்ளவை, ஓரிரண்டு ஊடகங்களில் எவ்வாறு வெளிவருகின்றன எனக் கேட்டார்.

இவ்வாறான தாக்குதல் நாளையும் நடக்கலாம். ஏனெனில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர்.

நேரத்துக்கு ஏற்றவாறு அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலந்தரையாடலை, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், அலி சப்ரி நாட்டின் தலைவர் அல்லவே அவர் நீதியமைச்சர் மாத்திரமே என்றார்.

Related Articles

யாழ் நல்லூர் பகுதி வீதி போக்குவரத்து ஒரு மாதத்துக்கு தடை !

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு...

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ் நல்லூர் பகுதி வீதி போக்குவரத்து ஒரு மாதத்துக்கு தடை !

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு...

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...

பளையில் எரிபொருள் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பளை நகரத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கு நியமனங்கள்

வடமாகாண விவசாயப் போதனாசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிமை (04) பிற்பகல்- 04 மணி முதல் யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் தலைமையில்...