March 4, 2021, 9:00 am

அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட முக்கிய அலுவலகம்

பளை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கையை கோட்டாபய அரசு மேற்கொள்கிறது.

இதற்காகவே, எல்.ஆர்.சி பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது. அந்த பகுதியில் சீன நிறுவனத்திற்கும், சிங்கள முதலாளிகளிற்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து சீனக்காரரிற்கு கொடுக்க, சிங்களவர்கறிற்கு கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

பளையில், புதுக்காட்டு சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திசபைக்கு சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன.

அதை சிங்கள முதலாளிகளிற்கு கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களிற்கு வழங்காமல் சிங்கள முதலாளிகளிற்கு வழங்கப்படுகிறது.

அரசியல் பிரச்சனையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தியென்ற பெயரில் தமிழர்களின் காணிகளை பிடுங்கி சிங்களவர்களிற்கு கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது.

அரசாங்கம், இராணுவம் அனைவரும் கூட்டாக இதனை செய்கிறார்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான். இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கிற்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களிற்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களிற்கு காணி வழங்காமல் சீனா, சிங்களவர்களிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களிற்கு தமிழ்மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலக்கு அரசு தள்ளுகிறது என்றார்.

Related Articles

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

சிவராத்திரி விரத ஏற்பாடுகளுக்காக ஆலயங்களுக்கு நிதியுதவி

மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி...

செனட் அடியின் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார் பாகிஸ்தான் பிரதமர்

நாட்டின் செனட் தேர்தலில் ஒரு முக்கிய ஆசனத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாராளுமன்றத்தில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இம்ரான் கானின்...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

சிவராத்திரி விரத ஏற்பாடுகளுக்காக ஆலயங்களுக்கு நிதியுதவி

மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி...

செனட் அடியின் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார் பாகிஸ்தான் பிரதமர்

நாட்டின் செனட் தேர்தலில் ஒரு முக்கிய ஆசனத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாராளுமன்றத்தில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இம்ரான் கானின்...

உடற்தகுதி சோதனையில் தேர்ச்சிபெற தவறிய வருண் சக்ரவர்த்தி!

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இந்திய தேசிய அணிக்கு தெரிவாவதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிபெற தவறியுள்ளார்.இந்நிலையில், பெங்களுருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் மறுசீரமைப்பு பயிற்சிகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளார்.துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு திறன்களை சிறப்பாக...

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

-என்.கண்ணன்“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாமலும், வெளிநாட்டுக் கடன்களை...