நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 722 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 713 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 77,906 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 71,176 பேர் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 6,321 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கையும் 422 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.