பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரியுள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த கோரிக்கையை முன்வைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லையெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அவர் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.