March 4, 2021, 9:05 am

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் முன்னாள் பா.உ யோகேஸ்வரனிடம் மட்டக்களப்பு பொலிசார் விசாரணை

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் போலிஸ் பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை வழங்கப்பட்டும் அதனை மீறி அப் பேரணியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து இன்றைய தினம் (17) மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை, எமது அலுவலகத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த போலிஸ் உத்தியோகத்தரால், “முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் போலிஸ் பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று எனக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான #p2p பேரணிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை எனக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் நான் அதனையும் மீறி நான் அந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவுகள் தங்களிடம் உள்ளதாகக்கூறி” என்னிடம் வாக்குமூலம் கோரப்பட்டது. 

அதற்கு பதிலளித்த நான் “இந்த நாடு சனநாயக நாடு. எனக்கிருக்கும் சனநாயக உரிமையின் அடிப்படையில் இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களில் நான் கலந்துகொள்ளச் சென்றது உண்மைதான். ஆனால், மாங்குளம் பொலீசார் மாங்குளம் புகையிரதக் கடவையை அண்மித்ததாக வைத்து நான் மட்டுமே வந்த எனது வாகனத்தினை மறித்து அந்த நீதிமன்றக் கட்டளையினை வழங்கினார்கள். அதனை வழங்கியதன் பின், நீதிமன்றத்தின் கௌரவத் தன்மையினை மதித்து, எனது பெயர் அக்கட்டளைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படா விடினும்கூட அதனை கௌரவமாக மதித்து தொடர்ந்து அப்பேரணியில் செல்வதை நிறுத்திக்கொண்டு நான் மட்டக்களப்புக்கு திரும்பிவிட்டேன்” என்பதை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.Attachments area

Related Articles

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான சலுகை காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021 மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சகம்...

யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும்...

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான சலுகை காலம் நீடிப்பு

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 2021 மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்பட்ட அபராதம் இந்த காலகட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சகம்...

யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும்...

சடலங்களை புதைத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து …

இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

சிவராத்திரி விரத ஏற்பாடுகளுக்காக ஆலயங்களுக்கு நிதியுதவி

மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி...

செனட் அடியின் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார் பாகிஸ்தான் பிரதமர்

நாட்டின் செனட் தேர்தலில் ஒரு முக்கிய ஆசனத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாராளுமன்றத்தில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இம்ரான் கானின்...