பொத்துவில்_தொடங்கி_பொலிகண்டி_வரை மக்கள் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ் மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்றுமுந்தினம் நேரடியாக சந்தித்து விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று 1)இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், 2)யாழ் வர்த்தக சங்கம், 3)சாவகச்சேரி வர்த்தக சங்கம் , 4)யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம், 5)வட பிராந்திய தனியார் போக்குவரத்து சங்கம், 6)வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம், சமாசங்கள், 7) வட பிராந்திய சுகாதார பரிசோதகர்கள் சங்கம், 8) யாழ் மாநகர சபை ஊழியர் சங்கம், 9) யாழ் நகர்ப்புற செம்மா வீதி பள்ளிவாசல் சமூகம் & முஸ்லிம் இளைஞர் கழகம் , 10)யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி ( ஆட்டோ ) சங்கம், 11) சாவகச்சேரி லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் தலைவர் , செயலாளர் நிர்வாகிகளையும் மற்றும் தீவக வலய கத்தோலிக்க குரு முதல்வர் ம. டேவிட் அடிகளார் அவர்களையும் சந்தித்து போராட்டத்திற்கான முழுமையான ஆதரவு கோரப்பட்டது .,அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்வரும் ஏழாம் திகதி ( ஞாயிற்றுக்கிழமை ) யாழ் குடாநாட்டினுள் உள்நுழைகின்ற பேரணிக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.






