March 8, 2021, 12:33 pm

சுதந்திரக்கட்சிக்கு கொரோனா தொற்றாதா?:விந்தன் கேள்வி

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியலையும் தாய்மாரை தாக்கும் கொரோனா அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவையோ அல்லது சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரையோ தாக்கதாவென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் நேற்றைய தினமான வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் , காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இலங்கையின் சுதந்திர தினத்தில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

அங்கு வருகை தந்த இலங்கை காவல்துறையினர் கொரோனா  தொற்று ஏற்படலாமென தெரிவித்து அவர்களது அகிம்சை வழி போராட்டத்தை தடுக்க முற்பட்டனர்.

ஆனாலும் போராட்டத்திலீடுபட்டிருந்த தாய்மார் போதிய சமூக இடைவெளியை பேணி முகக்கவசம் அணிந்திருந்தனர்.

ஆனால் அதேவேளை நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாட்டில் கொரோனா பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல்  ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருந்தது.அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ,சிங்கள காடையர்கள்,இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் வாள் வெட்டு ஆவா குழுவினரென பலரும் குறித்த ஊர்வலத்தில் பங்கெடுத்திருந்தனர்.

ஆனால் அவர்களை கொரோனா தாக்கதென்பதை இலங்கை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அதனால் அவர்களது ஊர்வலத்தை நிறுத்துமாறு இலங்கை காவல்துறை கேட்கவில்லை.

அதேபோன்று வீரசிங்கம் மண்டபத்தில் கட்சி கூட்டம் மண்டபம் நிறைந்ததாக நடத்தப்பட்டுள்ளது.

அங்கும் கொரோனா வந்தடையாதென்பதை இலங்கை காவல்துறை கண்டறிந்துள்ளதாவென கேள்வி எழுப்பியுள்ளார் விந்தன் கனகரட்ணம்.

உண்மையில் இலங்கை ஜனநாயக நாடென இப்போதும் எவராயினும் சொல்வார்கள் ஆனால் அவர்களது மனநிலை பற்றி ஆராயவேண்டும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையென தொடரும் அமைதி பேரணி மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்ந்து பயணிக்காதிருக்க வீதிகளில் முட்கம்பிகள் ,ஆணிகள் போடப்படுகின்றன.

தமிழ் மக்களிற்கு பாதுகாப்பில்லாத நாடாக இலங்கை இருக்கின்றது.பேசுவதற்கு எழுதுவதற்கு எதற்குமே இலங்கையில் பாதுகாப்பில்லையெனவும் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை! – எல்லே குணவங்ச தேரர்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட எவருக்கும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் குறித்தும் தற்போது மீளாய்வுகள் செய்யப்படுவதில்லை எனவும் அவர்...

யாழ்.நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு...

ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட நபரை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பிற்கு பிரச்சினை தொடரும்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டது யார் என்பதை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை! – எல்லே குணவங்ச தேரர்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட எவருக்கும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் குறித்தும் தற்போது மீளாய்வுகள் செய்யப்படுவதில்லை எனவும் அவர்...

யாழ்.நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு...

ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட நபரை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பிற்கு பிரச்சினை தொடரும்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டது யார் என்பதை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா...

சூடுபிடிக்கும் ஐ.நா விவகாரம்! தீவிர கண்காணிப்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதுவர்?

ஐ.நா விவகாரமானது சூடுபிடிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் ஆங்கில ஊடகமொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.குறித்த டுவிட்டர் பதிவில் 'இலங்கையில் வலுவான கண்காணிப்பின் கீழ் நான்...

பதக்கங்களை வென்று அஜித் சாதனை !

தென்னிந்திய தமிழ் நடிகர் தல என அழைக்கப்படும் அஜித் அவர்கள், நடிப்பு தவிர கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி, ஹெலி கேம் தொழில் நுட்பம் என்று பல விதங்களில்...