கண்டி – தலாதுஓயா – மலைப்பகுதியில் காவல்துறை தடையை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றினை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பாரவூர்தியில் மரக்கறி ஏற்றிச்செல்லும் போர்வையில் கால்நடைகளை கொண்டு சென்ற நிலையில் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அந்த பாரவூர்தியில் இருந்து 18 கால்நடைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளனர்.