February 25, 2021, 7:44 am

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: மன்னாருக்குள் பேரணிக்கு வந்தது தடை!

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் நடை பவனி இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்றைய தினம் புதன் கிழமை (3) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் பொலிஸார் மன்னார் நீதி மன்ற நியாதிக்க எல்லைக்கு உற்பட்ட பகுதிக்குள் குறித்த பவனியானது உள் நுழைவதையும், எதிர் வருகின்ற சுதந்திர தினத்தையும் அல்லது இன ஒன்றுமையை குழப்புகின்ற வகையிலும் இன முரண்பாட்டை தோற்று விக்கின்ற வகையிலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அதற்கான ஏற்பாடுகள் மன்னார் மாவட்டத்திற்குள்ள செய்யக்கூடது என்ற தடையுத்தரவினை கோரி 14 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்து கட்டளையினை பெற்றுள்ளனர்.

இத்தடை உத்தரவானது இன்று 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ் மாநகர சபை மேயர் மணிவண்ணன், வி.சிவகரன், அந்தோனி சகாயம், எம்.கே.சிவாஜிலிங்கம், சீ.வீ.கே.சிவஞானம் உட்பட 14 நபர்களுக்கு எதிராக இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கானது இன்றைய தினம் புதன் கிழமை (3) மன்னார் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டு சமர்பணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த சமர்பணமானது பொது தொல்லையாக எற்படுவதாகவும் கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரியிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த கட்டளைக்கு எதிராக வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் விதிகளை கடந்து போராட்டங்கள் மேற்கொள்வது ஜனநாயக உரிமை எனவும் இது அரசியல் அமைப்பில் அங்கிகரிக்கப்பட்ட உரிமை எனவும் சட்டத்தரணிகளினால் மன்றில் அட்சேபணை தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸாரால் கோரப்பட்ட கட்டளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !

பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...

நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா

அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...

யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...

இன்றைய ராசி பலன்கள் 25/02/2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...