பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இதையடுத்து, பொத்துவில் முழுவதும் இராணுவ வலயமாக மாற்றப்பட்டுள்ளது. பொத்துவில் நகரில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்கும் தமிழர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இதேவேளை, பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனைச்சாவடியை கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் செல்கிறார்களா என விசாரிக்கப்படுகிறார்கள்.
செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் வழிமறிக்கப்பட்டு, நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் இருக்கிறாரா என விசாரிக்கப்படுகிறது.