March 2, 2021, 5:50 pm

சூட்டுக் காயங்களுடன் இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் (01) மாலை 5.00 மணியளவில் குறித்த இளைஞர் முசல்குத்தி காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜெறின் எனும் 36 வயது நபரே படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.

இதேவேளை, செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

செட்டிகுளம் பகுதியில் வில்பத்து நோக்கி சென்ற இராணுவத்தினர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்பவதற்கான நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும் மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீர் என்று தங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒரு நபர் சிறு காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இரணைதீவு மக்கள் நாளை போராட்டம்!

கோவிட் வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று இரணைதீவு...

ஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் கெஹெலிய அவசர கோரிக்கை

ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட நிலைமையாகவே இலங்கை கருதுகின்றது. எனவே தான் நட்பு...

இப்போதைக்கு எந்தத் தேர்தலும் கிடையாது

இலங்கை இன்னமும் கோவிட் வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கான...

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ; திலீபன் தலைமையில்

2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...

யாழ் மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதரக ஓர் அதிகாரி

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் (...