March 8, 2021, 11:45 am

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கும்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் விஷேடமாக வடக்கு – கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பு வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றது.

பல்வேறு சட்டங்களைப் பாவித்து எங்களுடைய மக்களின் வழிபாட்டுத் தலங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நில அபகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொல்லியல் திணைக்களம் வருகை தந்து அடையாளப்படுத்தி வருகின்றது. ஆராய்ச்சி செய்கின்றது.

இதை தடுப்பது பற்றி தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.

வட கிழக்கு சிவில் அமைப்புகள், மத ஸ்தானங்கள் இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி, அரசியல் கைதிகள் விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நீண்டகால பிரச்சினைகள் மற்றும் ஜனாசா எரிப்பு விவகாரம், மலையக மக்களின் 1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பாக நீண்ட பட்டியல் தொடர்பாக சிவில் அமைப்புகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்புள்ளது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடர் சம்பந்தமாகவும், மூன்று கட்சிகள் சேர்ந்து அனுப்பிய கடிதம் சம்பந்தமாகவும் இன்று (01) கலந்துரையாடினோம்.

இது முக்கியமான ஒரு விடயம். இந்த ஒற்றுமை தொடர வேண்டும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று செயற்பட்டோம்.

தற்போது இரு தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்றபடியினால் தமிழ் தேசிய கட்சிகள் என்பதில் ஏனைய இரு கட்சிகளுக்கும் பங்குள்ளது.

எமது விண்ணப்பத்தை 47 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். அங்கு இடம்பெறும் தீர்மானம் குறித்து தொடர்ந்து ஆராய இருக்கின்றோம்.

ஜனாதிபதி ஆணைக்குழு என்பது கண் துடைப்பு நாடகம். ஆணைக்குழுக்களின் அறிக்கையை ஆராய இன்னொரு ஆணைக்குழு, அவர்களில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை.

உள்நாட்டிலே அனைத்தையும் செய்து முடிப்போம். ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு தேவையில்லை என்று கடந்த பெப்ரவரி மாதம் கடிதம் மூலம் அறிவித்த அரசாங்கம் இந்த பெப்ரவரி மாதத்துக்கு முன்பதாக ஆணைக்குழுவை நியமித்து உள்ளமை அரசாங்கம் சர்வதேசத்தை முட்டாளாக்குகின்ற விடயத்தைக் கைவிட்டு நேர்மையாக செயற்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தினாலே எவ்வளவு தூரம் முன்னேறலாம். இவர்களது ஆணைக்குழுவை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளப் போவதேயில்லை. இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிராகரிக்கும் என நம்புகின்றோம்.

புதிய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியிருக்கிறது. அதற்கு எமது யோசனைகளையும் நாம் அனுப்பியிருக்கிறோம். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வில்லாமல் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது அர்த்தமற்றது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.

அதனை தீர்ப்பதற்கான பல வரைபுகள் பல தடவைகள் செய்யப்பட்ட நிலையிலேயே இருப்பதை நினைவுபடுத்தியுள்ளோம். அந்தக் குழு இந்த மாதம் 20 ஆம் திகதி எம்மை சந்திப்பதற்கு ஒழுங்குசெய்துள்ளது. எனவே நேரடியாக சந்திக்கும்போதும் எமது நிலைப்பாடு பற்றிக் கூறுவோம் என மேலும் அவர் தெரிவித்தார்.

Related Articles

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடுவதில் சந்தேகம்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஜெப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இந்த...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம்...

பாடசாலை சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே கொரோனா தொற்றுக்குள்ளான விஷ்மி விஹாங்காய...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடுவதில் சந்தேகம்!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஜெப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இந்த...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண், மறுநாளான இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றே காரணம்...

பாடசாலை சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவிக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த சக மாணவி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.காலி தலேகான பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி யஷோதரா என்ற மாணவியே கொரோனா தொற்றுக்குள்ளான விஷ்மி விஹாங்காய...

மினி சூறாவளியால் டிக்கோயாவில் 23 குடியிருப்புகள் சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா படல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அத்தோட்டத்திலுள்ள 23 தொடர் மற்றும் தனிகுடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கை மார்ச் 15ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென அக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.