March 9, 2021, 3:10 am

கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு போராட்டம்

கோறளைப்பற்று வாழைச்சேசேனை பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் இன்று பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து  எதிர்தரப்பினரால் பிரதேச சபைக்கு முன்பாக கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி விசாரணை என்ன இழுத்தடிப்பா, அதிகாரிகளும் ஊழல் வாதிகளா, ஆளுநரே வர்த்தமானி வெளியீடு விளையாட்டு படகா, கிழக்கின் நிர்வாகம் யார் கையில் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது எதிர்ப்பு கோஷங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கு எதிரானதாகவும் இருந்தது.கிழக்கில் உள்ள 10 உள்ளுராட்சி சபைகளின்  2021 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பான குழப்ப நிலையை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒழுங்காக இடம்பெறவில்லை. சபையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு விசாரணையொன்றை மேற்கொள்ளும் முகமாக   கிழக்கு மாகாண ஆளுநரின் 08.01.2021 ஆம் ஆண்டிற்கான வர்த்தமானி அறிவித்தலின்படி தவிசாளர்களின் பதவி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு உப தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. 
அவ் வர்த்தமானியை இடை நிறுத்தி பதிலாக புதிய வர்த்தமானி அறிவித்தல் 27.01.2021 ஆம் திகதி புதன் கிழமை வெளியிடப்பட்டிருந்தது.கிழக்கு மாகாணத்தில் உள்ள 9 சபைகளுக்கே இவ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவித்தல்கள் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் உள்ளன. 
 கோறளைப்பற்று பிரதேச சபை மாத்திரம் இவ்வறிவித்தலில் உள்வாங்கப்படவில்லையென்பது எதிர்தரப்பினரின் ஆதங்கமாகும். 
அதாவது 9 சபைகளுக்கும் தவிசாளர் தெரிவிற்கான வாய்ப்புள்ளதாகவும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இவ் நடைமுறை பின்பற்றப்படவில்லையென்பதும் ஒரு குறைபாடகவுள்ளது எனவே 2021 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டதாகவே கருதி இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளிடப்பட்டுள்ளது  அதனை கண்டித்து தாம் நீதிமன்றம் செல்வதுடன் தொடர்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Related Articles

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவிப்பு

அத்தியாவசிய உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.பொருட்களுக்கான விலை அதிகரிப்பால்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம்...

எனக்கு அறிவித்திருந்தால் எப்படியேனும் தாக்குதலை தடுத்திருப்பேன்! – ரணில்

இந்திய புலனாய்வுத் தகவலை எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருப்பேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,“ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவிப்பு

அத்தியாவசிய உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.பொருட்களுக்கான விலை அதிகரிப்பால்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம்...

எனக்கு அறிவித்திருந்தால் எப்படியேனும் தாக்குதலை தடுத்திருப்பேன்! – ரணில்

இந்திய புலனாய்வுத் தகவலை எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருப்பேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,“ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய...

ஐ.நாவிற்கு பறந்த கூட்டமைப்பின் போலி அறிக்கை! அம்பலமாகும் இரகசியம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் அங்கத்துவ கட்சியைச் சார்ந்த எவரும் கையொப்பமிடவில்லையெனவும், அவை கூட்டமைப்பின் போலி அறிக்கையாகவே கருதப்படுமெனவும் ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளரும், முகாமைத்துவ ஆலோசகருமான சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.ஐ.நாவிற்கு...

கொரோனா தொற்றுக்குள்ளான 344 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 344 பேர் நேற்று (08) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,673 இலிருந்து...