கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறகட்டளையால் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த
விவசாய விஞ்ஞானியாக விருதுபெற்ற கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்கள்
மதிப்பளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். இந் நிகழ்வு நேற்று (31) கிளிநொச்சி
கல்வி வளர்ச்சி அறக்கட்டைளை அலுவலகத்தில் இடம்பெற்றது.
1997 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை விவசாய துறை தலைமை அலுவலகத்தினால்
விவசாய துறையில் புதிய கண்டுப் பிடிப்புக்களையும், ஆராச்சிகளையும்,
பங்களிப்புக்களையும் மேற்கொள்கின்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு
ஆண்டின் சிறந்த விவசாய விஞ்ஞானியாக விருது வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானியாக கிளிநொச்சி
இரணைமடு பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக
பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையில் முதன் முதலாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் . அவுஸ்ரேலியாவில் வசிக்கின்ற இளம் சட்டத்தரணி லக்ஸ்மி
லோகதாசன் அவர்கள் கலாநிதி அரசகேசரி அவர்களை கௌரவிக்க வேண்டும்,
ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் வழங்கிய ரூபா ஒரு இலட்சம் நிதி
புதிய விவசாய கண்டுபிடிப்புக்களுக்கான ஊக்குவிப்புக்கு வழங்கி
வைக்கப்பட்டது.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவரும் அதிபருமான அ. பங்கையற்செல்வன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வாழ்த்துரையினை அறக்கட்டளையின் தலைவர் த. சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி என். சுதாகரன், கிளிநொச்சி விதை நெல் ஆராச்சிப் பணிப்பாளர் சிவனேசன். விரிவுரையாளர் றஜிதன், அறக்கட்டளையின் பொருளாளரும் மாவட்ட கணக்காய்வு அலுலர் க.குகதாசன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இதன் போது கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் உயர்தரம் கணித
விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்,
அவர்களுக்கு முன் மாதிரியாகவும் இருக்கும் வகையில் விவசாய விஞ்ஞானி
கலாநிதி அரசகேசரி அவர்கள் சிறப்பான உரையாற்றியிருந்தார். அவரது உரை
மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் காணப்பட்டது.