March 7, 2021, 9:50 am

ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி குற்றச்சாட்டு!!

ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி குற்றச்சாட்டு!!

பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள்.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நம்புகின்றோம் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி குற்றச்சாட்டு.

இன்று ஞாயிற்றுக்கிழமை (31) நண்பகல் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக் கருத்தை தெரிவித்தார்…

மேலும் குறிப்பிடுகையில்..

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ள தற்போதைய ஜனாதிபதி யுத்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போதுதான் எனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தேன்.

எனது கணவர் எங்கே என்று சொல்ல முடியாத ஜனாதிபதியால் ஆணைக்குழுவை நியமித்து எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு.

கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எந்த ஒரு தலையிடும் தேவையில்லை என்ற இலங்கை அரசாங்கம்.

அவசர அவசரமாக ஆணைக்குழுவை நியமித்தது எதற்காக? உள்ளக பொறிமுறை என்பது தேவையற்ற ஒன்று எத்தனை ஆணைக்குழுக்கள் வந்தாலும் எமக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ள மனித உரிமை பேரவைக்கு முன்பு அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக பொறிமுறை எமக்கு தேவையில்லை.

எமக்கு தேவை சர்வதேசப் பொறிமுறையும் சர்வதேச விசாரணைதான் நீதியை பெற்று தரும்.

சர்வதேசத்தையும் தமிழர்களையும் அடி முட்டாளாக்கும் செயலைத்தான் தற்போது ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.

தமிழர்களாகிய எங்களுக்கு நடமாடும் சுதந்திரம் இல்லை இந்த தேசத்தில் வாழக்கூடிய சுதந்திரம் இல்லை. அவ்வாறான எங்களுக்கு சுதந்திர தினம் எதற்கு?

நாங்கள் சுதந்திரத்தை பெறவில்லை. தற்போது வரை எனது வீட்டை சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நான் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை. எனது கணவரை ஒப்படைத்த ஜனாதிபதியுடன் எனது கணவர் எங்கே என்று தான் கேட்கின்றேன்

Related Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

Stay Connected

6,575FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...