இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் நேற்றைய (30) இரண்டாம் நாளில் 32,539 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் (29) முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மேல் மாகாணத்தில் 10 மையங்களில் இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் கொவிட்-19 ஒழிப்பில் முன்னணியில் நின்று செயற்படும் ஊழியர்களுக்கு, முதற் கட்டமாக முதலாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று முன்தினம் (29) மேல் மாகாணத்தில் 5,286 பேருக்கும், நேற்றைய தினம் (30) நாடு முழுவதும் 32,539 பேருக்கும் என மொத்தமாக இதுவரை 37,825 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
