March 5, 2021, 2:20 pm

‘மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது’-சரத்வீரசேகர கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 30.1 பிரேரணை கொண்டு வரப்பட்டது. 30.1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக தனது தனிப்பட்ட விருப்பத்தை அரசாங்கத்தின் தீர்மானமாக தெரிவித்தார். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறதென பொது மக்கள்பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது. தமிழ் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்களென வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒரு தலைப்பட்சமான கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதென்பதை அறிய முடிகிறது.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை.

அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இன நல்லிணக்கம் என்று செய்த தவறுகளை திருத்தும் போது அதனை இன புறக்கணிப்பு என்று கருதுவது தவறான நிலைப்பாடாகும்.

30 வருட கால சிவில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தியது. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்காலக் கட்டத்தில் உள்ளக பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மனைவி இறந்த சோகம் தாங்காமல் கணவன் தற்கொலை

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுவங்கேணி பிரதேசத்தில் உயிரிழந்த தனது மனைவியின் 41ம் நாள் கிரிகையில் அன்று தனக்குத்தானே தூக்கிட்டு இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்று முன்தினம்...

வட்டக்கச்சியில் உயிரிழந்த பாலகர்களின் இறுதிச்சடங்கு இன்று …

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தாயொருவரின் விபரீத செயலால் உயிரிழந்த பாலகர்கள் மூவரின் இறுதிச்சடங்குகள் இன்று இடம்பெற்றது. குடும்ப வன்முறை காரணமாக மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாயார் காப்பாற்றப்பட்டு...

யாழ் நல்லூர் பகுதி வீதி போக்குவரத்து ஒரு மாதத்துக்கு தடை !

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு...

Stay Connected

6,571FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மனைவி இறந்த சோகம் தாங்காமல் கணவன் தற்கொலை

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுவங்கேணி பிரதேசத்தில் உயிரிழந்த தனது மனைவியின் 41ம் நாள் கிரிகையில் அன்று தனக்குத்தானே தூக்கிட்டு இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்று முன்தினம்...

வட்டக்கச்சியில் உயிரிழந்த பாலகர்களின் இறுதிச்சடங்கு இன்று …

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தாயொருவரின் விபரீத செயலால் உயிரிழந்த பாலகர்கள் மூவரின் இறுதிச்சடங்குகள் இன்று இடம்பெற்றது. குடும்ப வன்முறை காரணமாக மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாயார் காப்பாற்றப்பட்டு...

யாழ் நல்லூர் பகுதி வீதி போக்குவரத்து ஒரு மாதத்துக்கு தடை !

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு...

17 உந்துருளிகளை திருடிய 78 வயது வயோதிபர்

நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட...

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிறார் தசுன் சானக்க!

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமான இலங்கை குழாமின் இருபதுக்கு 20 அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்த தசுன் சானக்க எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (07) மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவர் பிரான்ஸ் வழியாக பயணமாகவுள்ளதுடன், ...