February 25, 2021, 4:32 pm

பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகத் திருத்தம் வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் வேண்டும் இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

யங்கரவாதத் தடைச் சட்டத்தில்
உடனடியாகத் திருத்தம் வேண்டும்

இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு,

அதனை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இணைய வழியாக நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியன இணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பில் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தகுந்த திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் மற்றும் நல்லாட்சி தொடர்பான ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 சர்வதேச சாசனங்களைச் திறம்படச் செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதே நேரம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது

Related Articles

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

Stay Connected

6,521FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலை தொடர்பில் ரஞ்சனுக்கு வந்த அழைப்பு !

அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.அதன்பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2...

ஏப்ரல்21 தாக்குதல்:ஆணைக்குழு அறிக்கையை சுதந்திர கட்சி நிராகரித்தது

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கை தொடர்பாக நிலவுகின்ற விடயங்களில் இறுதியானதும், வினைத்திறனானதுமான தீர்வொன்றைக் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது...