March 7, 2021, 5:07 pm

“குருந்தூரில் இருந்த இந்துக் கோவில் அழிக்கப்பட்டதா ?” ரவிகரன் எடுத்துள்ள நடவடிக்கை!!!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு,

இந்துக் கோவிலை காணவில்லையென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும்,

தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.

மேலும் முறைப்பாடு தொடர்பில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது.

அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்குச் செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர்

இந் நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர் மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான

சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்களுடன் நானும், சில பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களோடும் சென்றிருந்தோம்.

அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.

இதனைவிட ஆலய நிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப் போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்களும் அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.” என்றார்.

Related Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

500 ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூறைக் கடந்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஏழ்மையில் வாடும் மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் – பிரதமர் மோடி

இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின்...

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

அரசின் கைக்கூலியாம் முன்னணி – மணிவண்ணன்

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக் களத்தில் விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 8ஆவது...